TNPSC Thervupettagam

தமிழ்நாடு தரவுக் கொள்கை

March 18 , 2022 858 days 6526 0
  • தமிழ்நாடு அரசானது, திறம்பட்ட சில முடிவுகளை மேற்கொள்வதற்காக வேண்டி தரவுகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு தரவுக் கொள்கையினை உருவாக்கியுள்ளது.
  • இது கொள்கை உருவாக்கம், திட்ட அமலாக்கத்தினை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ஊக்குவித்தல், சேவைகளுக்கான அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • தலைமைச் செயலாளரின் தலைமையிலான மாநில அளவில் அதிகாரம் பெற்ற ஒரு தரவு நிர்வாகக் குழுவானது, தரவுக் கொள்கைக் கட்டமைப்பிற்கான ஒரு மூலோபாய வழிகாட்டுதலை வழங்கும்.
  • தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் (TNeGA) தலைமை நிர்வாக அதிகாரியின் தலைமையிலான துறைகளுக்கு இடையேயான ஒரு தரவு குழுவானது, கொள்கையின் வழியிலான செயல்பாட்டு நிலை முடிவுகளை மேற்கொள்ளும்.
  • தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி, மாநிலத்தின் முதன்மைத் தரவு அதிகாரியாகச் செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்