தமிழ்நாடு தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த தளவாடத் திட்டம்
March 24 , 2023 614 days 508 0
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த தளவாடத் திட்டத்தினை முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்தக் கொள்கையின் குறிக்கோள் ஆனது, "மாநிலத்தின் மேம்பட்ட போட்டித்திறன் மற்றும் விரைவான பொருளாதார மேம்பாட்டிற்காக என்று தமிழக மாநிலத்தில் ஓர் ஒருங்கிணைந்த, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் நிலையானத் தளவாட அமைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதாகும்".
நவீன காலத் தொழில்நுட்பங்களை ஏற்றல், திறன் மேம்பாட்டினைச் செயல்படுத்துதல் மற்றும் தளவாட சூழல் அமைப்பில் நெகிழ்திறன் மற்றும் நிலைப்புத் தன்மையை உருவாக்குதல் ஆகியவை இந்தக் கொள்கையினுடைய முக்கிய நோக்கங்களின் ஒரு பகுதியாகும்.
இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஓர் உத்திசார் திட்டமாகும்.
இது இதற்காக அடையாளம் காணப்பட்ட திட்டங்கள், அவற்றிலிருந்துப் பெறவுள்ள விளைவுகள், காலக்கெடு மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான முக்கியப் பங்குதாரர்கள் ஆகியவற்றினைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இக்கொள்கையின் நோக்கம்:
மாநிலத்தில் தளவாடங்கள் (ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து) சார்ந்த செலவினங்கள் குறைப்பு;
தளவாட உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல்;
தளவாடத் துறை தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் மாநிலம் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையேயான திறன்மிக்க ஒருங்கிணைப்பு செயல்முறையினை உருவாக்குதல்.
மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு என்று நியாயமான விலையில் மருத்துவ மற்றும் சுகாதாரக் காப்பீடு வழங்குவதற்கான அம்சம் குறித்தும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.