TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம் - நவம்பர் 1

November 2 , 2019 1793 days 1436 0
  • 1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலச் மறுசீரமைப்பிற்குப் பின்னர் ஆறு தசாப்தங்கள் கழித்து முதல்முறையாக, தமிழ்நாடு மாநில நிறுவன தினமானது நவம்பர் 1 அன்று கொண்டாடப் பட்டது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆனது 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தமிழகம் என அழைக்கப்படும் தற்போதைய நிலப்பரப்பு முந்தைய மதராஸ் மாகாணத்திலிருந்துப்  பிரிக்கப்பட்ட நாளைக் குறிக்கின்றது.
  • இந்த நிலப்பரப்பிற்கு  மதராஸ் மாநிலம் என்று பெயரிடப் பட்டது.
  • ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பல தமிழ் அறிஞர்களும் அதற்காக குரல் கொடுத்தனர்.
  • 1967 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார்.
  • அதன் பின்னர் 1969 னவரி 14 ஆம் தேதி முதல்  மாநிலத்தின் பெயர் அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

வகை

பெயர்

சின்னம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

மொழி

தமிழ்

விலங்கு

வரையாடு

பறவை

மரகதப் புறா

மலர்

செங்காந்தள் மலர்

மரம்

பனை மரம்

பழம்

பலா

பாடல்

தமிழ்த் தாய் வாழ்த்து

விளையாட்டு

கபடி

நடனம்

பரத நாட்டியம்

பட்டாம்பூச்சி

தமிழ் மறவன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்