TNPSC Thervupettagam

தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024

January 7 , 2024 323 days 634 0
  • இந்தக் கொள்கையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தத் துறையில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தென்னை நார் உற்பத்தித் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியினை ஆதரிக்கும் ஒரு மூலோபாய கட்டமைப்பை வழங்குவதையும் இந்தக் கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இது புதிய, புதுமையான தேங்காய் நார் தயாரிப்புகளுக்கு வேண்டிய பிரத்தியேகமாக தொழில்துறை-கல்வித்துறை-தனியார் ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறப்பு மையங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழகத்தில் 4.46 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்படுகிறது.
  • நமது மாநிலத்தின் தென்னை உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 10,484 காய்களாக உள்ளது.
  • தென்னை நார் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீடு 5,331 கோடி ரூபாய் ஆகும்.
  • தமிழ்நாட்டில் தென்னை நார் பொருட்களின் மொத்த விற்பனை 5,368 கோடி ரூபாய் ஆகும்.
  • தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 2,186 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்