TNPSC Thervupettagam

தமிழ்நாடு நலத்திட்டத்தில் புதிய விதி

August 2 , 2023 482 days 298 0
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் ஒரு புதிய விதியானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது உயிரிழப்பை விளைவிக்கும் விபத்துகளின் போது கூலித் தொழிலாளர்கள் (உடல் உழைப்பு) மற்றும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த விதியின் படி, ஒரு கூலித் தொழிலாளி தனது பணியிடத்தில் விபத்து காரணமாக உயிரிழந்தால், இறந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக அவர்களின் சார்பாக குறிப்பிடப்பட்ட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
  • இந்த விதிமுறைகள் ஆனது, வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
  • ஒரு விபத்தானது தொழிலாளியின் வேலைசார்ந்தச் சூழலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பயனைப் பெற முடியும்.
  • இதில் வேண்டுமென்றே தானாக முற்பட்டு உள்ளாகும் காயம், தற்கொலை, போதை, பித்து, அல்லது சட்டத்தை மீறுதல் ஆகியவை அடங்காது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்