தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவையில் 2019-20 நிதியாண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
சிறப்புக் கூறுகள்
தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2019-20ம் நிதியாண்டில் 44,176.30 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதி விதிமுறையான 3 சதவிகிதம் என்ற வரம்பிற்குள்ளாக, ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் 2.50 சதவிகிதமாக இருக்கும்.
மாற்றுத் திறனாளி நபர்களுக்கு 3000 இரு சக்கர இயந்திர வண்டிகள் வழங்கப்படும்.
கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கரிம வேளாண்மை சான்றளிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
80 ஆழ்கடல் மீன்பிடிப் படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக் கோள் தொலைபேசிகள், 160 நாவ்டெக் உபகரணங்கள் ஆகியவற்றை அரசு வழங்க முன்மொழிந்திருக்கின்றது.
2000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
பழங்குடி மாணவர்களின் நலனிற்காக மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளில் புதிய பள்ளிகளை ஆரம்பிக்கின்ற அரசு சாரா குழுக்களுக்கு ஆதரவளிக்க மாநில அரசு 25 கோடியை ஒதுக்கி இருக்கின்றது.
தமிழ்நாடு மின்னணு நிர்வாக நிறுவனத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு, பெருந் தகவல், இயந்திரக் கற்றல், ஆளில்லா விமானங்கள், இணைய தள விவகாரங்கள் ஆகியவற்றை உபயோகித்திட “சிறப்பு நிபுணத்துவ மையம்” ஒன்று அமைக்கப்படும்.
உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் வெளியிடப்படும்.
250 மெகாவாட் திறனுடன் தேனி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க அரசு முன்மொழிந்திருக்கின்றது.