2020 - 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
தமிழ்நாட்டின் நிதித் துறை அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் (துணை முதல்வர்) தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிதிநிலை அறிக்கையினைச் சமர்ப்பிக்க இருக்கின்றார்.
2021 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக, அதிமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் நிதிநிலை (பட்ஜெட்) கூட்டத் தொடரானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை நடைபெற இருக்கின்றது.