TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020

February 19 , 2020 1798 days 831 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மூன்று மணி நேரம் பதினைந்து நிமிட உரையுடன் தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 10வது முறையாக மாநில நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
  • உலகளாவிய மற்றும் தேசியப் பொருளாதாரப் பிரச்சினைகளின் காரணமாக 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 7.27% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 2018 - 19 ஆம் ஆண்டில் 8.17% ஆக இருந்தது.
  • தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையானது 2.84% என மதிப்பிடப் பட்டுள்ளது.

2020 – 21 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

  • தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ரூ. 70 கோடி செலவில் உணவுப் பூங்காக்கள் நிறுவப்பட இருக்கின்றன.
  • அதிகாரிகளை விவசாயிகள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக “உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டத்தை” விரைவில் தொடங்க அரசு முயற்சித்து வருகின்றது.
  • அம்மா உணவகத் திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் அவற்றை நிர்வகிப்பதற்காகவும் ஒரு ‘இலாப நோக்கற்ற’ சிறப்பு நோக்க முகமை ஒன்றை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • அத்திக்கடவு - அவினாசி நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக ரூ.500 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • பக்கிங்ஹாம் கால்வாய், அதன் வடிகால்கள் மற்றும் கூவம் & அடையாரின் அனைத்து வடிகால்கள் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் புனரமைப்பிற்காக மொத்தம் ரூ. 5,439.76 கோடி நிதியானது செலவு செய்யப்பட உள்ளது.
  • பள்ளி கல்வித் துறைக்கு ரூ. 34,181.73 கோடியும் உயர் கல்விக்கு ரூ. 5,052.84 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • முத்திரை வரியானது முந்தைய 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
  • மீன்வளத் துறை - மீனவர்களுக்கான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செலுத்தி-வாங்கி சாதனங்கள் அதிக எண்ணிக்கையிலான இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளுடன் பொருத்தப்பட இருக்கின்றன.
  • சென்னை - புற வளையச் சாலை மற்றும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தொழில் துறை பெருவழிப் பாதைத் திட்டங்களுக்கு தலா ரூ.  1,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
    • வளையச் சாலைத் திட்டமானது எண்ணூர் துறைமுகத்திற்கான அணுகலை வழங்க இருக்கின்றது.
  • கீழடியில் உள்ள அகழ் வைப்பகத்திற்காக தமிழ்நாடு அரசானது ரூ. 12.21 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
  • நெம்மேலியில் தற்பொழுது கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு உப்புநீக்க ஆலைக்கும் பேரூரில் அமையவிருக்கும் மற்றொரு ஆலைக்கான பணிகளைத் தொடங்குவதற்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்