TNPSC Thervupettagam

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம், 2023

August 28 , 2023 456 days 465 0
  • தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி அவர்கள், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்தச் சட்டத்தின்படி, ஒரு திட்டத்தினை முன்மொழியும் நிறுவனமானது திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை ஒருங்கிணைக்கச் செய்வதற்கான ஒரு முன்மொழிதல் விண்ணப்பத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், அரசு அதனை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து, சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும்.
  • இதற்காக அரசானது ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.
  • இது அந்த நில ஒருங்கிணைப்பு முன்மொழிதலை வெளியிட்டு, பொது விசாரணையை மேற்கொள்ளும்.
  • இக்குழுவானது வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரித்து, இத்திட்டத்தில் ஆர்வமுள்ள நபர்களின் கருத்துகளைப் பெற்று ஆட்சியரிடம் சமர்ப்பிக்கும்.
  • "அது பொருத்தமானது என்று கருதும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதல் அல்லது ஒரு முழு ஒப்புதல் அளிக்க கூடிய" ஒரு தகுதி வாய்ந்த அதிகாரியிடம் அதனை ஒப்படைக்குமாறு  ஆட்சியர் இறுதியில் பரிந்துரைப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்