தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2024
February 25 , 2024 274 days 700 0
தமிழகச் சட்டசபையானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு வெவ்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் (நான்காவது திருத்தம்) சட்டம் ஆனது, கழிவுநீர் தொட்டிகளில் இருந்து இருந்து வடித்தல் செயல்முறை மூலமாக கழிவுநீரை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் லாரிகள் (சுமையுந்துகள்) அல்லது பிற வாகனங்களின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் மலக் கசடு மற்றும் கழிவுநீரைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதி செய்யும் வகையில் அவற்றை இடம் மாற்றி கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
இந்த புதிய பிரிவில் கூறியுள்ளபடி, “1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் எதுவும் இல்லாமல், எந்தவொரு நபரும், பஞ்சாயத்து அமைப்புகளின் எல்லைகளுக்குள், குடியிருப்பு அல்லது வணிக அல்லது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு கட்டிடத்திலிருந்தும் மலக் கசடுகள் அல்லது கழிவு நீரினைச் சேகரிக்கவோ, இடம் மாற்றிச் செல்லவோ அல்லது அகற்றவோ கூடாது.
ஆனால், உள்ளாட்சி அமைப்பின் எந்தவொரு அமைப்பு அல்லது அரசாங்கத்தின் சட்டப் பூர்வ வாரியமானது, அந்தக் கசடுகள் அல்லது கழிவுநீர் சேகரிப்பு, இடம் மாற்றம் மற்றும் அகற்றுவதற்கு அத்தகைய உரிமம் தேவையில்லை.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் (ஐந்தாவது திருத்தம்) சட்டமானது, "கழிவுகள் உருவாக்கப்படும் இடங்களிலிருந்தே பிரிக்கப் பட்ட கழிவுகளைச் சேகரிக்கும் செயல்முறையைப் பின்பற்றி, அதற்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப் பட்ட இடத்தில் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமான முறைகளில் இடம் மாற்றம் செய்து, செயல்முறைக்கு உட்படுத்தி, அகற்றுதல் மூலமாக பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதற்காக திடக்கழிவுகளை மேலாண்மை முறையை கையாள்வது பஞ்சாயத்து அமைப்புகளின் முதன்மை கடமையாகும்" என்று கூறுகிறது.