TNPSC Thervupettagam

தமிழ்நாடு பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் ஆணையம்

September 16 , 2021 1171 days 1210 0
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினருக்காக வேண்டி ஒரு குழுவினை அமைக்கச் செய்வதற்கான ஒரு மசோதாவினை (2021 ஆம் ஆண்டு தமிழக மாநில பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் ஆணைய மசோதா) தாக்கல் செய்தார்.
  • இந்த ஆணையமானது 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
  • இது தலைவர், துணைத் தலைவர் மற்றும் 5 இதர உறுப்பினர்களையும் கொண்டு இருக்கும்.
  • அவற்றுள் மூவர் பட்டியலினச் சாதியினர் பிரிவினராகவும், இருவர் பட்டியலினப் பழங்குடியினர் பிரிவினராகவும் ஒரு பெண் உறுப்பினரும் நியமிக்கப்படுவர்.
  • இந்த ஆணையமானது தன்னிச்சையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் (அ) அவரது சார்பாக ஏதேனும் ஒரு நபர் அளித்த ஒரு மனுவின் பேரிலோ விசாரணையினை மேற்கொள்ளும்.
  • இது 1955 ஆம் ஆண்டு உரிமையியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் (வன்கொடுமை) தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட எந்த உரிமையும் மீறப்படுதல் மீதான புகார்களை விசாரணை செய்யும்.
  • நிறுவப்பட உள்ள இந்த மாநில ஆணையம் செயல்படத் தொடங்கும் வரையில் தேசிய பட்டியலினச் சாதியினர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் ஆணையம் தொடர்ந்து செயல்படும்.
  • இத்தகைய உரிமை மீறல்களைத் தடுப்பதில் அலட்சியம் காட்டும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆணையமானது பரிந்துரை செய்யலாம்.
  • இந்த வகுப்பினரின் நலன் கருதி வெவ்வேறு சட்டங்களில் உள்ள பாதுகாப்பு விதிகளை இந்த ஆணையம் விசாரித்து அதனைக் கண்காணிக்கும் எனவும் அதற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தச் சமுதாயத்தினர் தொடர்பான திட்டச் செயல்களில் மாநில அரசு இந்த ஆணையத்துடன் கலந்தாலோசிக்கும்.
  • பாகுபாட்டினைத் தவிர்ப்பதற்காக வேண்டி ஆராய்ச்சிப் பணிகளையும் இந்த ஆணையம் ஈடுபடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்