TNPSC Thervupettagam

தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 3.0

February 6 , 2025 17 days 109 0
  • தமிழ்நாடு பருவ நிலை உச்சி மாநாடு 3.0 ஆனது சென்னையில் நடைபெற்றது.
  • இந்த முக்கிய நிகழ்வின் போது, ​​சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி பல்வேறு தொழில் நுட்பங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவற்றின் மீதான  சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க ஊக்குவிக்கும் வகையில், தொழில்துறைகளின் தன்னார்வ மதிப்பீட்டிற்கான வலை தளத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • தொழில்துறைகளுக்கான வழங்கீட்டுச் சான்றிதழ் திட்டத்தினை அறிமுகப் படுத்தும் 'Lifestyle for Climate' என்ற ஆவணத்தினையும் அவர் வெளியிட்டார்.
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கார்பன் மீது மிகை நீக்கம் செய்வதற்கான செயல் திட்டமும் இந்த நிகழ்வில் தொடங்கப்பட்டது.
  • இது குறைவான கார்பன் உமிழ்வு சார்ந்த வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியாக இந்தப் பகுதியில் தொழில்துறையை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான ஒரு குறிப்பிட்டத் திட்டமாகும்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் குழுமங்கள் நிறுவப் படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
  • இது பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே கற்பிப்பதற்கான அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்