TNPSC Thervupettagam

தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டப் பணி

December 10 , 2022 719 days 494 0
  • தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டப் பணி அமைப்பானது (TNCCM), அண்ணா பல்கலைக் கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்துடன் இணைந்து ‘பருவநிலை அரங்கத்தினை' அமைக்க உள்ளது.
  • இது அனைத்துப் பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஒற்றை மூல ஆதாரத் தரவு மையமாக இருக்கும்.
  • பசுமை பருவநிலை மாற்ற நிறுவனமானது, தமிழகத்தைப் பருவநிலை சார்ந்த திறன் மிகு மாநிலமாக மாற்றுவதற்கான சிறப்பு நோக்கத்திற்கான ஒரு செயற் கருவியாக உருவாக்கப் பட்டது.
  • தமிழ்நாடு பசுமைப் பருவநிலை மாற்ற நிறுவனமானது கீழ்க்காணும் பகுதிகளில் கவனம் செலுத்தும்
    • பல்வேறு துறைகளுக்கான கார்பன் நீக்க படிநிலைகளைத் தயாரித்தல்
    • நிதி மாதிரிகள் மற்றும் ஒரு பருவநிலை அரங்கங்களுக்கான கருத்துருவாக்கம் செய்தல் மற்றும் அவற்றை நிறுவுதல்
    • பருவநிலை சார்ந்த வரவு செலவு அறிக்கை மற்றும்
    • உள்ளூர் நிறுவனங்களுடனான கூட்டாண்மை.
  • 23.71 சதவீதமாக உள்ள மாநிலத்தின் பசுமைப் பரவலை 33 சதவீதமாக உயர்த்துவதே பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டமானது, கடலோரப் பகுதிகளில் உயிர் வேலி அமைத்தல், பசுமைக் கூட்டுறவு, பருவநிலை சார்ந்த திறன்மிகு கிராமங்கள், தொழிற் சாலைகள் மற்றும் கட்டிடங்களின் பசுமை மதிப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • தமிழ்நாட்டை ஒரு திறன்மிகு பருவநிலை மாநிலமாக மாற்ற தனக்கெனத் தனியாக ஒரு பருவநிலை மாற்றத் திட்டத்தினை ஆரம்பித்திடும் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்