அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களின் ஆதார் அட்டை குறித்த விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் பள்ளிகளால் கட்டாயம் சேகரிக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பில் (Educational Management Information System - EMIS) பதிவேற்றப்பட வேண்டும்.
EMISற்கான ஆதார் பதிவு மற்றும் இந்த விவரங்கள் சேகரிப்பு ஆகியவை மத்திய அரசினால் பகுதியளவு நிதியளிக்கக்கூடிய சமக்ரா சிக்சா நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.