தமிழ்நாடு அரசு ஆனது சட்டமன்றத்தினால் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து, 2012 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தினை (2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது) நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது.
உயர் நீதிமன்றமானது, மாநிலத்தில் உள்ள பாரம்பரியக் கட்டமைப்புகளை வெகுவாக பாதுகாப்பதற்கான ஆணையத்தினை அமைக்குமாறு அரசிற்கு தற்போது உத்தரவு இவிட்டுள்ளது.
இந்தச் சட்டமானது தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதனைக் கட்டாயமாக்குகிறது.
பாரம்பரிய வளங்களின் பாதுகாப்பில் ஈடுபாடுள்ள மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு புகழ்பெற்ற நபரின் தலைமையில் இது அமைக்கப் பட உள்ளது.
1958 ஆம் ஆண்டில் மத்திய அரசால் இயற்றப்பட்ட மற்றும் மாநில அரசின் (1966) பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சியப் பகுதிகள் சட்டங்களின் விதி வரம்பிற்கு உட்படாத பல வரலாற்றுக் கட்டிடங்கள் நமது மாநிலத்தில் உள்ளன.
இச்சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளபடி, மாநிலத்தில் உள்ள பாரம்பரிய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஆணையம் பாதுகாக்க உள்ளது.