வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு நீதியரசர் வி பாரதிதாசன் தலைமையிலான மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேலும் ஆறு மாத கால அவகாசம் கோரி உள்ளது.
தற்போது, அந்த ஆணையத்தின் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 10.5% உள் இடஒதுக்கீடு 26 பிப்ரவரி 2021 அன்று அதிமுக அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது.
பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும்.
சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர்களுக்கான ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கூறிய பின்னர் அதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.