TNPSC Thervupettagam

தமிழ்நாடு புத்தமத சுற்றுலா சுற்றுப் பாதை

November 1 , 2019 1907 days 941 0
  • காஞ்சிபுரத்தில் போதிதர்மரின் பிரம்மாண்ட சிலை ஒன்றைக் கட்டத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக மாநிலத்தில் புத்த யாத்திரை சுற்றுப் பாதை ஒன்றை ஊக்குவிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சிலையின் உருவ அளவானது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலைக்கு அடுத்த நிலையில்  இருக்கும்.
  • புத்தமத சுற்றுப் பாதைக்காக காஞ்சிபுரம், மாமல்லபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் ஆறு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • சீன சுற்றுலாப் பயணிகளுடன் உரையாடுவதற்காக அடிப்படை மாண்டரின் மொழி குறித்து 10 சுற்றுலா வழிகாட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்