புற்றுநோய் நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத் துறை இணைந்து தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1,00,000 என்ற அளவிலான மக்கள்தொகையின் மீதான புற்றுநோயின் நிகழ்வு விகிதமானது ஆண்களில் கண்டறியப் பட்டுள்ள 74.4 என்ற விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக பெண்களில் 93.9 என்ற விகிதத்தில் உள்ளது.
இது உலகின் எந்தவொரு புற்றுநோய் பதிவகத்தாலும் மதிப்பிடப் பட்ட அளவில் ஒரு மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
புற்றுநோய்கள் மீதான அதிகபட்ச புற்றுநோயின் நிகழ்வு விகிதமானது (CIR - Crude Incidence Rate) ஆனது சென்னையிலும் (140.8), குறைந்த பட்ச அளவிலான விகிதமானது கிருஷ்ணகிரியிலும் (48.5) காணப் பட்டுள்ளது.
சென்னையில் பெண்களுக்கு மத்தியில் காணப் பட்டுள்ள மார்பகப் புற்றுநோயின் பாதிப்பானது நாட்டில் மிக அதிகமானதாகும் (1,00,000 பெண்களுக்கு 46.4).