TNPSC Thervupettagam

தமிழ்நாடு புல்வெளி மறுசீரமைப்புத் திட்டத்திற்கான மாதிரிப் பகுதி

February 29 , 2024 141 days 178 0
  • தமிழ்நாடு மாநில வனத்துறையானது, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (FCRI) இணைந்து, கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் மாதிரிப் புல்வெளி மறுசீரமைப்புப் பகுதியினை அமைப்பதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது.
  • FCRI குழுவானது, சிறுமுகை பகுதி வனச்சரகத்தின் உலர்-இலையுதிர் வனப்பகுதியான பெத்தி குட்டை என்ற காப்புக் காட்டில் ஒரு ஹெக்டேர் பரப்பிலான நிலத்தை இதற்காக அடையாளம் கண்டுள்ளது.
  • இது மாதிரிப் புல்வெளி மறுசீரமைப்புத் திட்டமாக மாற்றப்படும்.
  • இது தமிழக அரசின் மெய்ப்புலம் என்ற திட்டத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர்ப்பெருக்க வளங்காப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள் நடவடிக்கைகளுக்கான ஒரு பசுமைத் திட்டத்திற்கான (TBGPCCR) மாதிரிப் பகுதியாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்