புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2023 என்ற கொள்கையினை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்.
வலுவான பேரிடர் மேலாண்மை இயந்திரங்களின் உதவியுடன் பேரழிவுகளின் மீதான எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதை இந்தக் கொள்கை நோக்கமாக கொண்டு உள்ளது.
பேரிடர் அபாயத்தைக் குறைக்கச் செய்வதற்கான ஒரு உலகளாவிய மற்றும் தேசியக் கட்டமைப்பிற்கு இணங்கி, மாநிலத்தின் கருதுகோள்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இது மாநில அரசு, உள்ளூர் அரசாங்கங்கள், மத்திய அரசு மற்றும் தனியார் துறை ஆகியவை இணைந்து செயல்படுவதற்கு ஏற்ற ஒரு நிலையான, மாநில அளவிலான நிறுவனக் கட்டமைப்பை வழங்குகிறது.