தமிழ்நாடு பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1975
December 16 , 2024 6 days 82 0
இந்த மசோதாவானது 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப் படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தினை 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்திற்கு இணங்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் தேதி முதலான நாட்களிலிருந்து பின்னோக்கிய தேதிகளிலும் பொருந்தச் செய்யும் வகையில் திருத்த முயல்கிறது.
இந்த மசோதாவானது, தேவையான சரிபார்ப்பு விதிமுறைகள் மற்றும் அரசியல் அமைப்பின் 254(2) என்ற ஒரு சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப் பட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் திருத்தச் சட்டத்தின் (அங்கீகரிக்கப் படாத ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்) 7வது பிரிவின் (இ) வகுப்பில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது.
“பொது வளாகம்” என்ற சொல்லின் வரையறைக்குள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் வளாகத்தினைச் சேர்த்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் அமைப்பிற்குச் சொந்தமான வளாகத்தில் இருந்து அதில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப் படுவர்.