தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939 மீதான அவசரச் சட்டம்
September 10 , 2020 1595 days 781 0
தமிழ்நாடு மாநில ஆளுநரான பன்வாரி லால் புரோகித் அவர்கள் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939 (2வது திருத்தம்) என்ற சட்டத்தின் மீதான அவசரச் சட்டம், 2020 என்ற ஒரு சட்டத்தைப் பிரகடனப் படுத்தியுள்ளார்.
இது கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமான பொது முடக்கம் மற்றும் சமூக இடைவெளி விதிகளின் விதிமீறல்களை “கூட்டுக் குற்றமாக” ஆக்கியுள்ளது.
இது இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் நபர்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த செயல்பாடுகளைத் தடை செய்கின்றது.
இந்த அவசரச் சட்டமானது வணிக அமைப்புகள் மற்றும் இதர பொது இடங்களுக்காக வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமாக ரூ.5,000 விதிக்க வழிவகை செய்கின்றது.
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமாக விதிக்கப் படவுள்ளது.
பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப் படவுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப் படவுள்ளது.