TNPSC Thervupettagam

தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939

April 6 , 2020 1567 days 3290 0
  • இச்சட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • அரசாங்கக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இடங்கள் பார்வையாளர்களுக்குத் தேவையான நீர்க் குழாய்கள், கை கழுவும் இடங்கள், கை கழுவும் திரவம் மற்றும் சோப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். 
  • பார்வையாளர்கள், அவர்களது கைகளைக் கழுவிய பின்னரே இந்தப் பகுதிகளுக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப் பட  வேண்டும். 
  • கோவிட் – 19 பாதிப்பு குறித்து ஏதேனும் தகவல் இருப்பின் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அது குறித்து 24 மணி நேரத்திற்குள் பொதுச் சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்திற்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களது வளாகங்களில், கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939ன் கீழ் “அறிவிக்கப்பட்ட நோயாக” அறிவித்து உள்ளது.
  • இந்த ஒழுங்கு முறைகள் தொற்று நோய்கள் சட்டம், 1897-ன் கீழ் குறிப்பிடப் பட்டுள்ளன. 
  • இந்த அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்கத் தவறியவர்கள் மேலே கூறிய இரண்டு சட்டங்களின் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கைகளை எதிர் கொள்ள நேரிடும்.
  • இது தவிர, இந்த விதிமுறைகளை மீறியவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் 6 மாத சிறைத் தண்டனையையோ அல்லது அபராதத்தையோ அல்லது இரண்டையுமோ எதிர்கொள்ள நேரிடுவர். 
  • பின்வரும் சட்டங்கள் தொற்று நோய்கள் மற்றும் கொள்ளை நோய்களின் போது தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கின்றது.
    • இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 260 மற்றும் 270 (உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான நோய்களைப் பரப்பும் வகையில் அலட்சியமாக அல்லது கொடிய நோய்களைப் பரப்பும் வகையில் செயல்படுதல்)
    • தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939.
    • தொற்று நோய்கள் சட்டம், 1897
    • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005

kalyanasundaram December 06, 2021

சுதந்திரம் மற்றும் இந்திய குடியரசு தினத்திற்கு முன் (1947& 1950 )இயற்ற பட்ட இந்தசட்டம் தற்போது 2021 ல் நடைமுறையில் உள்ளதா...

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

KanjamalaiNarayanan January 10, 2022

This is very essential.The vaccine should be taken every citizen of According to the act and prevention of Infectious disease rules.There is no compromise.

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்