தமிழ்நாட்டின் முதல் 2024-25 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையானது, நிதித் துறையுடன் இணைந்து மாநிலத் திட்டமிடல் ஆணையத்தினால் தயாரிக்கப்படுகிறது.
நாட்டின் நிலப்பரப்பில் 4% மற்றும் மக்கள் தொகையில் 6% பங்கு கொண்ட தமிழக மாநிலம் ஆனது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களித்துள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது, தனிநபர் வருமானத்தில் நான்காவது பெரிய மாநிலமாகவும் மாறியுள்ளது.
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில், ஆண்டிற்கு சுமார் 2.78 லட்சம் ரூபாய் தனிநபர் வருமானம் பதிவாகிறது என்ற நிலையில் இது 1.69 லட்சம் என்ற தேசியச் சராசரியை விட அதிகமாகும்.
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி) 27.22 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
பெயரளவு வளர்ச்சி 13.71% ஆகவும் மற்றும் உண்மையான ஒரு வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் இருந்தது.
சேவைத் துறையானது (மூன்றாம் நிலை), நமது மாநிலத்தின் மொத்த மாநில மதிப்புக் கூட்டலில் அதிகபட்சமாக 53.63% பங்கினை அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையானது (இரண்டாம் நிலை) 33.37% பங்கினையும் மற்றும் வேளாண் (முதன்மை) துறை 13% பங்கினையும் அளித்தது.
தொழில்துறையில், தமிழக மாநிலம் ஆனது நாட்டின் உற்பத்தித் துறை சார் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9% பங்கினை அளித்துள்ளது.