தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30 ஆம் தேதியை “மருத்துவமனை தினமாக” அனுசரிக்கவிருக்கின்றன.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டின் புகழ்பெற்ற பெண் மருத்துவர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முதலாவது பெண் சட்டசபை உறுப்பினர் ஆவார்.
மேலும் இவர் 1954 ஆம் ஆண்டில் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தையும் நிறுவியுள்ளார்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை நிதிகளை அளிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், சமுக அமைப்புகள் மற்றும் பெரு நிறுவனங்களைப் பாராட்டுவதோடு மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளை விளம்பரப் படுத்துவதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1956 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது.
இவருடைய புத்தகம் : சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்.
தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தின் பின்னணியில் இருந்த முக்கியமான நபர் இவராவார். (மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது 1930 ஆம் ஆண்டில் – மசோதா நிறைவேற்றப் பட்டது 1947 ஆம் ஆண்டில்)