தமிழக அரசானது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றியப் பங்களிப்பினை விவரிக்கும் ஒரு ஆவணத்தினைத் தொகுத்து வெளியிட உள்ளது.
சென்னையில் சிவானந்தா சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் ஒரு நினைவுத் தூணினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
75வது சுதந்திர தினத்தின் நினைவாக இந்த தூணானது எழுப்பப் பட்டுள்ளது.
மேலும் இவர், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 17,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை 8,500 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவித்தார்.
மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகமானது புனரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.