தமிழக அரசின் மாநில விருதுகள் திருவள்ளுவர் தினமான சனவரி 15 அன்று பிரபலமானவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டாற்றிய ஒன்பது பேருக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டு பொன்னாடையும் அணிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் ஒன்பது விருதுகள்:
திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களித்தமைக்காக முனைவர் கோ. பெரியண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருது, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட நல்முயற்சிகளுக்காக பா. வளர்மதிக்கு வழங்கப்பட்டது.
மலைவாழ் சமூக மாணவர்களுக்கு கல்வித் தொண்டாற்றிய டாக்டர். கே.ஜே. ஜார்ஜுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
அண்ணா தொழிற்சங்கத்தின் நிறுவன உறுப்பினரான அ. சுப்ரமணியத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.
மகாகவி பாரதியார் விருது - முனைவர் க. பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது - எழுத்தாளர் கே. ஜீவபாரதி
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – எழுத்தாளர் வை. பாலகுமாரன்
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பா. மருதநாயகத்துக்கு வழங்கப்பட்டது.