TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில நாய் வளர்ப்பு கொள்கை, 2024

October 2 , 2024 52 days 188 0
  • தமிழ்நாடு மாநில நாய் வளர்ப்புக் கொள்கை, 2024 ஆனது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்தியத் தட்பவெப்ப நிலையைத் தாங்க முடியாத நாய் இனங்களை வளர்ப்பதை இந்தக் கொள்கை தடை செய்கிறது.
  • இது ஆரோக்கியம் மற்றும் நலன் கருதி இனப்பெருக்கம் தடை செய்யப்பட வேண்டிய குளிர் பருவநிலையில் வளரும் நாய்களின் பட்டியலில் பக் மற்றும் சோவ் சோவ் ஆகிய இனங்களையும் சேர்த்துள்ளது.
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கையானது, இந்த ஒன்பது நாய் இனங்களை மட்டுமே பட்டியலிட்டிருந்தாலும், இறுதி வரைவில் மேலும் இரண்டு இனங்கள் (பக் மற்றும் சோவ் சோவ்) சேர்க்கப்பட்டுள்ளன.
  • இறுதிக் கொள்கையில் இராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி ஆகியவை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • கட்டை, இராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி, செங்கோட்டை ஆகிய நாட்டு நாய்கள் அழிந்து விடாமல் தடுப்பதற்காக, அவை தரப்படுத்தப்பட்டு, அங்கீகாரம் பெற்று, பதிவு செய்யப்பட வேண்டும்.
  • இந்த மையங்களில் நாட்டு இனங்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இந்த கொள்கை கூறுகிறது.
  • குறைந்த அளவே இடனம் உள்ள வீட்டில் நாட்டு நாய்களை வளர்க்க பரிந்துரைக்கப் பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்