TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

January 3 , 2021 1480 days 1517 0
  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி S.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார்.
  • அவர் தமிழக ஆளுநரால் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • முதலமைச்சர், மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவால் இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களாகவும், தலைவராகவும் நியமனம் செய்யப் படுவோர் பரிந்துரைக்கப் படுவார்கள்.
  • ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மீனா குமாரியின் பதவிக் காலத்திற்குப் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் பதவி காலியாக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், இந்த ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக நீதிபதி ஜெயச்சந்திரன் என்பவர் நியமிக்கப் பட்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்