முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 72வது குடியரசுத் தினத்தன்று மாநில விருதுகளை வழங்கினார்.
சுகாதார மற்றும் காவல் துறைகளின் ஊர்திகள் முதல் பரிசை வென்று உள்ளன.
ஊரக வளர்ச்சித் துறைக்கு இரண்டாம் பரிசு கிடைத்து உள்ளது.
சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவை மூன்றாம் பரிசை வென்று உள்ளன.
சேலம் நகர காவல் நிலையம், திருவண்ணாமலை நகர காவல் நிலையம் மற்றும் கோட்டூபுரம் காவல் நிலையம் ஆகியவை மாநிலத்தின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
அதிக அரிசி உற்பத்தித் திறனுக்கான சி நாராயணசாமி நாயுடு விருதானது வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.செல்வ குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜபார் அவர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதைப் பெற்றார்.
பின்வரும் நான்கு காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப் பட்டுள்ளது.
டி.மகுடேஸ்வரி - புனித தோமையார் மலை
என்.செல்வராஜு - சேலம்
எஸ்.சண்முகநாதன் - ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும்
எஸ்.இராஜசேகரன் - திருவண்ணாமலை.
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றவர்கள்
பி. முல்லை - LPG உருளை வெடித்த ஒரு விபத்தில் இருந்து 26 மாணவர்களைப் காப்பாற்றிய ஆசிரியை.
ஏ. பிரகாஷ் - 60 அடி ஆழமான கிணற்றில் விழுந்த யானையை மீட்பதில் ஈடுபட்ட வனக் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்.
லோகோ பைலட் ஜே.சுரேஷ் - இரயிலில் இருந்த 1,500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர்
ஆர். புகழேந்திரன் - மரம் விழுந்ததில் காயமடைந்த காவலரின் உயிரைக் காப்பாற்றியவர்.