TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில விருதுகள்

January 17 , 2021 1282 days 999 0
  • முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதுகளையும் 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதையும் 2020 ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ் புத்தாண்டு விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளையும் அறிவித்தார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுகளுக்காக 38 மாவட்டங்களில் இருந்து முப்பத்தெட்டு தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள் உ.வே.சா விருதிற்குத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
    • அவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று புகழப் படுகிறார்.
    • கரிசல் வட்டார வழக்கு அகராதி என்ற ஒரு அகராதியை அவர் எழுதியுள்ளார்.
  • கம்பர் விருதானது எச்.வி.ஹண்டேவுக்கு வழங்கப்பட்டது.
    • அவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவராக ஒரு மூத்த அரசியல்வாதியாக இருந்தார்.
    • இவர் கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்

  • 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - முனைவர் வைகைச் செல்வன்
  • தந்தை பெரியார் விருது - அ. தமிழ்மகன் உசேன்
  • அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ. அருணாச்சலம்,
  • பேரறிஞர் அண்ணா விருது - அமரர் திரு. கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
  • பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் ச. தேவராஜ்
  • மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது - அறிவுமதி (எ) மதியழகன்
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - வி.என். சாமி
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் வீ. சேதுராமலிங்கம்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்

  • 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் தாய் விருது - வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
  • கபிலர் விருது - செ. ஏழுமலை
  • உ.வே.சா விருது - கி. இராஜநாராயணன்
  • கம்பர் விருது - மருத்துவர் எச்.வி. ஹண்டே
  • சொல்லின் செல்வர் விருது - நாகை முகுந்தன்
  • உமறுப் புலவர் விருது - ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
  • ஜி.யு.போப் விருது - ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனைவர் திருமதி உல்ரீகே நிகோலஸ்
  • இளங்கோவடிகள் விருது - மா. வைத்தியலிங்கன்
  • அம்மா இலக்கிய விருது - முனைவர் தி. மகாலட்சுமி
  • சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது - ஆ. அழகேசன்
  • மறைமலையடிகளார் விருது - மறை. தி. தாயுமானவன்
  • அயோத்தி தாசப் பண்டிதர் விருது - முனைவர் கோ.ப. செல்லம்மாள்
  • அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் ஊரன் அடிகள்
  • காரைக்கால் அம்மையார் விருது - முனைவர் மோ. ஞானப்பூங்கோதை
  • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது - தினமணி நாளிதழ்
  • சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது - கல்கி வார இதழ்
  • சி.பா. ஆதித்தனார் மாத இதழ் விருது - செந்தமிழ் மாத இதழ்
  • தேவநேயப் பாவணர் விருது - முனைவர் கு. சிவமணி
  • வீரமாமுனிவர் விருது - ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரி ஜேம்ஸ்
  • சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது - சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத்
  • 2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது - சே. இராஜாராமன்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்

  • 2020 ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது - பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிஸ் தேவராசு சேன்மார்க்
  • இலக்கண விருது - இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு
  • மொழியியல் விருது - சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுபா திண்ணப்பன்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்