TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் சொந்த வரி வருவாய்ப் பாதிப்புகள்

December 24 , 2023 337 days 211 0
  • மொத்த வருவாயில் 70 சதவீதத்திற்கும் மேலான பங்கினை அளிக்கும் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
  • நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) 1,81,182 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 20.61% வளர்ச்சியாகும்.
  • தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 78.9% SOTR ஆகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் இதுவரையில் (2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை), தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 84,930.9 கோடி ரூபாயாக இருந்தது.
  • இது நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் சுமார் 46.88% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்