TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் மின்சார நிலைமை 2034-35

February 26 , 2025 6 days 88 0
  • தமிழ்நாடு 2024-25 முதல் 2034-35 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டங்களில் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
  • சமீபத்திய ஒரு ஆய்வின்படி, 2034-35 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக வழங்கப்படாத மின்சாரம் சுமார் 45,587 மில்லியன் அலகுகளாக இருக்கும்.
  • 2023-24 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் உச்ச கட்ட மின் தேவையான 19,045 மெகா வாட் ஆனது எந்த நிறுத்தமும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது.
  • 1,26,151 MU வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு எதிராக 1,26,163 மில்லியன் அலகுகள் (MU) மின்சாரத் தேவை உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டிற்கான மொத்த ஒப்பந்த திறன் 36,593 மெகாவாட் ஆகும்.
  • மொத்த ஒப்பந்தத் திறனில் (CC), புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான ஒப்பந்தத் திறனின் பங்கு 61% ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநிலத்தில் 20,830 மெகாவாட் என்ற உச்ச கட்ட மின் தேவைப் பதிவானது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று 454.320 மில்லியன் அலகுகள் என்ற அதிக அளவிலான தினசரி நுகர்வு பதிவானது.
  • 2025 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இம்மாநிலத்தின் மின்சார நுகர்வானது இந்தப் பதிவினை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2034-2035 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் உச்ச கட்ட மின் தேவையானது 35,507 மெகாவாட்டை எட்டும் என்றும், அதன் ஆற்றல் தேவை 2,49,580 மில்லியன் அலகுகளை எட்டும் என்று கணித்துள்ளது.
  • 2034-35 ஆம் ஆண்டிற்கான மொத்த திட்டமிடப்பட்ட ஒப்பந்த திறன் ஆனது, 98,140 மெகா வாட் ஆகும்.
  • 2024-25 ஆம் ஆண்டில் உற்பத்தி மூலங்களில் சுமார் 64 சதவீதமாக இருந்த புதைபடிவ எரிபொருள் சாராத திறனின் பங்கு ஆனது, 2034-35 ஆம் ஆண்டில் சுமார் 77% அளவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்