தமிழக மாநில அரசு ஆனது, 16வது நிதிக் குழுவின் தமிழ்நாடு மாநில வருகையின் போது அதற்கான குறிப்பாணையை ஒப்படைத்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலீட்டுத் தேவையானது 6.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், நகர்ப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்பு தேவைகள் 5.32 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
மின்துறைக்கான நிதித் தேவையானது சுமார் 62,000 கோடி ரூபாயாகவும், தொழில் மயமாக்கலுக்கான முதலீட்டுத் தேவை 43,600 கோடி ரூபாயாகவும் இருந்தது.
பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் நவீனமயமாக்கலுக்கு 7,000 கோடி ரூபாயும் தேவை.
கடல் சார் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்று, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான நிதி ஆதரவு தலா 5,000 கோடி ரூபாய் ஆக குறிப்பிடப்பட்டது.