TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த சந்தை கடன்கள்

August 28 , 2023 327 days 210 0
  • 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தின் மொத்த சந்தைக் கடன்கள் 25,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இதன் மதிப்பு 8,000 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டத்தில் பதிவான கடன்களில் திருப்பிச் செலுத்தப் பட்டக் கடன்களை நீக்கியப் பிறகு நிகரக் கடன்கள் 17,000 கோடி ரூபாயாக உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலக் கட்டத்தில் சுமார் 5,528 கோடி ரூபாயாக இருந்தது.
  • மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDL) எனப்படும் பத்திரங்களின் ஏலத்தின் மூலம் சந்தையில் இருந்து மாநில அரசுகள் கடன் பெறுகின்றன.
  • மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
  • மாநில அரசுகள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% வரை கடன் பெறலாம்.
  • மின் துறைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5% கூடுதல் கடன் பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்