மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மாநிலமானது 2019 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
இது மின்சார வாகனங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி வரை அவ்வாகனங்களுக்கு சாலை வரியில் 100 சதவிகிதம் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இக்கொள்கை கூறுகின்றது.
2030 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற, விற்கப்படுகின்ற மற்றும் பதிவு செய்யப்படுகின்ற மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித மாநில சரக்கு மற்றும் சேவை வரியானது "திருப்பித் தரப்படும்".
சுற்றுலா மற்றும் வணிகம் சார்ந்த மின்சார வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படும்.
சிறப்பு எண் தகடுகள்
போக்குவரத்து வாகனங்களின் பதிவு எண் பச்சை நிறப் பின்புலத்துடன் மஞ்சள் நிறத்தில் காட்சிப் படுத்தப்படும்.
மற்ற அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பதிவு எண்கள் பச்சை நிறப் பின்புலத்துடன் வெண்மையாகக் காட்சிப் படுத்தப்படும்.