TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை

September 17 , 2019 1952 days 1826 0
  • மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மாநிலமானது 2019 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

  • இது மின்சார வாகனங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி வரை அவ்வாகனங்களுக்கு சாலை வரியில் 100 சதவிகிதம் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இக்கொள்கை கூறுகின்றது.
  • 2030 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற,  விற்கப்படுகின்ற மற்றும் பதிவு செய்யப்படுகின்ற மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித மாநில சரக்கு மற்றும் சேவை வரியானது "திருப்பித் தரப்படும்".
  • சுற்றுலா மற்றும் வணிகம் சார்ந்த மின்சார வாகனங்களுக்கான அனுமதிக் கட்டணம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படும்.

சிறப்பு எண் தகடுகள்

  • போக்குவரத்து வாகனங்களின் பதிவு எண் பச்சை நிறப் பின்புலத்துடன் மஞ்சள் நிறத்தில் காட்சிப் படுத்தப்படும்.
  • மற்ற அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பதிவு எண்கள் பச்சை நிறப் பின்புலத்துடன் வெண்மையாகக் காட்சிப் படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்