TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதலமைச்சரின் சமீபத்திய அறிவுப்புகள்

April 6 , 2020 1567 days 795 0
  • தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத் துறையானது “திருக்கோவில்” என்ற ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாப்பு மையமானது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் தொடங்கப்பட இருக்கின்றது.
  • தமிழ்நாடு மாநில உயர் கல்வி மையத்தின் வளாகத்திற்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டப்பட இருக்கின்றது. தமிழ்நாடு மாநிலத்தில் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கைக்கு இவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக அதற்கு இவரது பெயர் சூட்டப்பட இருக்கின்றது.
  • மேலும் இந்த வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட இருக்கின்றது.
  • தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டில் உள்ள மணி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியான வெள்ளையத் தேவனின் சிலை திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறில் உள்ள தொழிற்துறைப் பூங்காவில் ஒரு மருந்துப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  • தொழிலாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று துப்பரவுப் பணியாளர்கள் (பாதுகாப்புப் பணியாளர்கள்) இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் எனத் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.
  • ஜப்பானிய முறையான மியாவாக்கி என்ற காடுகள் வளர்ப்பு முறையானது தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத திறந்தவெளிப் பகுதிகளில் காடுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்று முதல்வர் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்