TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதலமைச்சரின் சுதந்திர தின விருதுகள்

August 21 , 2019 1795 days 876 0
  • சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பின்வரும் விருதுகள் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டன.
விருது
ஆளுமைகள் / அமைப்புகள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

இஸ்ரோ தலைவர், K. சிவன்

தைரியம் மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது

P. ரம்யாலட்சுமி

அதீத தீரச் செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது

கொள்ளையர்களை விரட்டியடித்ததற்காக திருநெல்வேலியில் உள்ள கடையம் கிராமத்தைச் சேர்ந்த P. சண்முகவேலு மற்றும் அவரது மனைவி செந்தாமரை.

சிறந்த செயல்பாடுகளுக்கான விருது

1) பெருநகர சென்னை காவல் துறை ஆணையகம் - மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துதல் மற்றும் குற்றக் காண்காணிப்பிற்கா பேஸ்டேக்ஆர் செயலியை அறிமுகப்படுத்துதல்.

 

2) பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி ஆற்றின் மறுசீரமைப்புத் திட்டம்

வரிச் செயலிக்கான விருது

வணிக வரித்துறை - ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதற்கு உதவியளிப்பதற்காக அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையத்தை ஏற்படுத்தியதற்காகவும் கைபேசிச் செயலியை மேம்படுத்தியதற்காகவும்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக முன்மாதிரியான சேவையை அளித்தல்

வேப்பேரியில் உள்ள அறிவார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புப் பள்ளி

சிறந்த மருத்துவர் விருதுகள்

அரசு கீழ்ப்பாக்க மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் V. ரமாதேவி மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்                            S. வெற்றிவேல் செழியன்

சிறந்த தனியார்துறை  வேலையளிப்பவர் விருது

எவரெஸ்ட் ஸ்டெபிலைசர்ஸ் நிறுவனம்

சிறந்த சமூகப் பணியாளர் விருது

சந்திர பிரசாத், பாத்வே அமைப்பு

சிறந்த கூட்டுறவு வங்கி விருது

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி

பெண்களின் நலனுக்காக சிறந்த சேவையை  அளித்ததற்கான விருது

M. சூசை மரியன்

பெண்களுக்குப் பணியாற்றியதற்கான சிறந்த நிறுவனம்

போதிமரம், சேலம்

சிறந்த மாநகராட்சி

சேலம்

சிறந்த 3 நகராட்சிகள்

தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது

P. நவீன் குமார், M. ஆனந்த் குமார், R.கலைவாணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்