முதல்வர் அவர்கள் 51,157 கோடி ரூபாய் தொகுப்பு முதலீட்டில் 28 தொழில்துறைத் திட்டங்களுக்கான அடிக்கல்லினை நாட்டினார்.
17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 கூடுதல் திட்டங்களுடன் மொத்தம் 47 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த முன்னெடுப்புகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்கார்ப் நிறுவனமானது, தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி அலகுகளை நிறுவுவதற்கு 36,238 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ குழுமமானது 20,114 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீரேற்ற நீர்த்தேக்க ஆற்றல் சேமிப்புத் திட்டங்களையும் அமைக்க உள்ளது.
மாநில அரசானது TIDCO மற்றும் TATA Technologies ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் கோயம்புத்தூரில் தமிழ்நாடு பொறியியல் மற்றும் புத்தாக்க மையத்தை (TN ENGINE) நிறுவ உள்ளது.