TNPSC Thervupettagam

தமிழ்நாடு மூலதனச் செலவினம் 2024-25

December 25 , 2024 19 days 107 0
  • 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் சுமார் 17,773.80 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் மூலதனச் செலவினமானது, 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் சுமார் 8.4% குறைந்து 16,283.84 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த மூலதனச் செலவினம் ஆனது, சுமார் 47,681 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 42,532 கோடி ரூபாயை விட 12.11% அதிகரித்துள்ளது.
  • மொத்தத்தில், 20 முன்னணி மாநிலங்களின் மூலதனச் செலவினம் ஆனது 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 9.8% குறைந்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம் (-72% வருடாந்திர வளர்ச்சி), தெலுங்கானா (-56%), ஹரியானா (-38%), உத்தரகாண்ட் (-35%), மற்றும் உத்தரப் பிரதேசம் (-16%) ஆகியவற்றில் மூலதனச் செலவினங்களின் வீழ்ச்சி குறிப்பிட்ட அளவில் கடுமையாக இருந்தது.
  • இருப்பினும், 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களின் மூலதனச் செலவில் இரட்டை இலக்க வளர்ச்சியானது பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்