நாட்டிலேயே இது முன்னெப்போதும் இல்லாத இதே வகையிலான முதல் முயற்சி ஆகும்.
மாநிலத்தில் யானை இறப்புகளை பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் மிகவும் விரிவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை அமைக்கிற வகையில் தமிழ்நாடு வனத்துறை யானை இறப்புத் தணிக்கைக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
யானையின் இறப்புக்கான காரணங்களைத் தீர்மானிக்க, பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்கான ஒரு முறையான நிலையான நெறிமுறையை இது பரிந்துரைக்கிறது.
தடுக்கக்கூடிய மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்களின் சூழ்நிலைகளை ஆய்வு செய்யவும், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்கவும் இது உதவும்.
தமிழகம் முழுவதும் உள்ள காட்டு யானைகள் இறப்பிற்கு இது பொருந்தும்.
இது அனைத்து வனவிலங்குப் பகுதிகளிலும், பிராந்தியப் பிரிவுகளிலும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.
உலகில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவைக் கொண்டுள்ளது.
நம்பமுடியாத அளவிற்கு, இவை இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் மக்களுடன் வாழ்கின்ற நிலையில், அவற்றின் வாழிடப் பகுதி சுமார் 20 சதவிகிதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளது.
ஆயினும்கூட, அவற்றின் எண்ணிக்கையானது நிலையாக அல்லது சில பிராந்தியங்களில் அதிகரித்து வருகிறது.
நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளில் ஒன்றான யானைகள், காடுகளில் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள் மற்றும் ஒரு தலைமுறையின் நீளம் 22 ஆண்டுகள் என்ற அளவில் வாழ்கின்றன.