இரண்டு நாட்கள் அளவிலான தமிழ்நாடு யானைகள் வளங்காப்பு குறித்த மாநாடானது கோவையில் நிறைவு பெற்றது.
கைவிடப்பட்ட யானைகளைப் பராமரிப்பதற்காக என்று விலங்கு முகாம்களில் உள்ள யானைகள் பராமரிப்பு மற்றும் சீர்தரச் செயல்பாட்டு நடைமுறை (SOP) பற்றிய ஒரு கையேட்டினை வனத் துறையானது வெளியிட்டுள்ளது.
தமிழக வனத்துறையில், கால்நடை மருத்துவச் சேவைக்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்ட தனிப் பிரிவினை உருவாக்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
42 யானைகள் வழித்தடங்கள் (பாலக்காட்டின் தெற்கே 24 தடங்கள் மற்றும் பாலக் காட்டின் வடக்கே 18 வழித்தடங்கள்) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) அமைப்பானது, தமிழ்நாட்டில் ‘யானைத் திருவிழாவினை’ தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.