TNPSC Thervupettagam

தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா - 2018

July 13 , 2018 2197 days 5947 0
  • அலுவலகப் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா, 2018 ற்கு தமிழ்நாடு சட்டசபை ஜூலை 09, 2018 அன்று அனுமதி அளித்துள்ளது.
  • ஜூலை, 10-ல் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் காலக் கெடுவினை அடுத்து தமிழக அரசு இந்நடவடிக்கையினை எடுத்துள்ளது.
  • நான்கு வருட காலத்தில் நடைபெற்ற ஊழலின் புகார்கள் லோக் ஆயுக்தா புகாரின் பேரில் பதிவு செய்யப்படும்.
  • இந்த மசோதாவின் படி, கையூட்டுக்கெதிரான குழுவை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி (அ) ஓய்வுப் பெற்ற நீதிபதி (அ) ஊழலுக்கெதிரான திட்டங்கள், பொது நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, நீதி மற்றும் சட்டம் ஆகியவற்றில் 25 வருடங்கள் அனுபவம் உள்ள நபர் தலைமை தாங்குவார்.
  • ஊழலுக்கெதிரான மக்கள் குறைகேட்கும் குழுவில், இரண்டு நீதித்துறை உறுப்பினர்களுடன் நான்கு உறுப்பினர்கள் இருப்பர்.

உறுப்பினர்களின் நியமனம்

  • தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார்.
  • இந்த தேர்வுக்குழு, முதலமைச்சரைத் தலைவராகவும் சட்டசபை சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் (அ) சட்ட சபையிலுள்ள பெரிய ஒற்றை எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியவர்களையும் கொண்டது.

லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்

  • எந்தவொரு நபரையும் வரவழைக்கவும் ஆய்வு செய்யவும் உறுதிச் சான்றிற்கான ஆதாரங்களைப் பெறவும் லோக் ஆயுக்தா அதிகாரம் கொண்டுள்ளது.
  • CrPC (Criminal Procedure Code), 1908-ன் கீழ் இவ்வமைப்பின் விசாரணைப் பிரிவு சிவில் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.
  • லோக் ஆயுக்தா மசோதாவிற்கு 2013ம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்தது. 2014-ம் ஆண்டு லோக் ஆயுக்தா மசோதாவினை அறிவித்தது.
  • ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்று அறியப்படும் அமைப்பை உருவாக்கலாம் என்று லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா, 2013 கூறுகிறது.

RajendranJayaraman April 04, 2024

Thanks

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்