TNPSC Thervupettagam

தமிழ்நாடு வனத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 2024

August 8 , 2024 107 days 200 0
  • இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி, தமிழகத்தில் சுமார் 3,063 யானைகள் உள்ளன.
  • இது 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தையக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப் பட்ட 2,961 யானைகள் என்ற எண்ணிக்கையின் விட அதிகமாகும்.
  • யானைகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது சத்தியமங்கலம் புலிகள் வளங் காப்பகம் STR)-சத்தியமங்கலம் வனப் பிரிவில் (372) அதிகமாக பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் (336), STR-ஹாசனூர் (279), MTR-உதகை (271), MTR-மசினகுடி (263), ஓசூர் (240) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஐந்து யானைகள் வளங்காப்பகங்களில், நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலைகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து நிலம்பூர்-அமைதிப் பள்ளத்தாக்கு-கோவை, அகத்தியர்மலை, ஆனைமலை-பரம்பிக்குளம் மற்றும் பெரியார் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கை அளவில் யானைகள் உள்ளன.
  • நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் யானைகள் வளங்காப்பகங்கள் இரண்டிலும் ஒருசேர மாநிலத்தின் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 70% முதல் 80% வரையிலான யானைகள் உள்ளன.
  • இந்த வளங்காப்பகங்கள் ஆனது, கேரளாவில் உள்ள வயநாடு மற்றும் நிலம்பூர் காப்பகங்களுடனும், கர்நாடகாவில் உள்ள மைசூர் காப்புக் காடுகளுடனும் சேர்ந்து நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலையின் நிலப்பரப்புகளாக உள்ளன.
  • 3,200 யானைகள் என்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் நிலப்பரப்பு அதிகபட்ச தாங்கு திறனை எட்டுவதால் அதற்கு மேல் வசிக்க இயலாது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்