தமிழ்நாடு விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2014
December 15 , 2024 7 days 69 0
உண்டுறை விடுதிகள், வாடகை விடுதி மனைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வீடுகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் வீடுகள் (ஒழுங்குமுறை) சட்டத்தினை ஏற்ற வகையில் திருத்தம் செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் முன்வைத்துள்ளது.
இது போன்ற உண்டுறை விடுதிகள், வாடகை விடுதி மனைகள் மற்றும் வீடுகளின் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை மின்னணு வடிவில் பெற வழி வகை செய்கிறது என்ற நிலையில் இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு "தானாகவே மின்னணு வடிவில் உருவாக்கப் படும்".
முன்னதாக, இந்த விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் பட வேண்டும்.
செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளாக இருந்த நிலையில், இந்த மசோதா தற்போது அதை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முயல்கிறது.