TNPSC Thervupettagam

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர உதவி முன்னெடுப்பு

March 19 , 2019 1950 days 758 0
  • 2017 ஆம் ஆண்டின் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின்படி நாட்டின் மொத்த சாலை விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் தமிழ்நாட்டின் பங்கு 10.1 சதவிகிதம் ஆகும்.
  • காவல்துறை, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகிய பல்வேறு பங்குதாரர்களின் முயற்சியினால் 2018 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகளானது 24.39 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
  • உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகவும் சுகாதாரத் துறையின்கீழ் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர உதவி முன்னெடுப்பு (TAEI - Tamil Nadu Accident & Emergency Care Initiative) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • TAEI ஆனது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைநகர் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
  • அனைத்து TAEI மையங்களும் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரி ஆகியோர்களைக் கொண்டிருக்கும்.
  • இந்த முன்னெடுப்புகள் சாலைப் பாதுகாப்பு மீதான இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இக்குழுவானது தமிழ்நாட்டின் முன்னெடுப்புகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்