தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022 முக்கிய அம்சங்கள்
March 24 , 2022 981 days 954 0
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 33,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வேளாண் துறைக்காக, கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 32,775.78 கோடி ரூபாயிலிருந்து ரூ.231.90 கோடி ரூபாய் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்து அதற்காக 5,157.56 கோடி ரூபாயினை ஒதுக்கி உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 126 லட்சம் மெட்ரிக் டன்களாகும்.
பருத்தி மகசூலை அதிகரிப்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு நிதியுடன் சேர்த்து, 15.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலையானப் பருத்திச் சாகுபடி என்ற திட்டமானது அமல்படுத்தப்படும்.
தமிழகத்தின் தஞ்சாவூர், சேலம், திருவள்ளூர், நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சோயா அவரைச் சாகுபடியை அதிகரிப்பதற்கு வேண்டி சில சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட 3,204 கிராமப் பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் செலவில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டமானது அமல்படுத்தப்பட்டது.
மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் தர்மபுரி, நாகப்பட்டினம், வேலூர், மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 4 புதிய உழவர் சந்தைகள் நிறுவப்படும்.
மாநில மரமான பனை மரத்தின் எண்ணிகையை அதிகரிப்பதற்காக 10 லட்சம் பனை விதைகளை மாநில அரசு விநியோகம் செய்யும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு மானியமாக மெட்ரிக் டன்னிற்கு ரூ.195 மானியம் வழங்கப் பட உள்ளதால் அதன்மூலம் 1.2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துடன் இணைந்து “தமிழ் மண் வளம்” என்ற ஒரு பிரத்தியேக தளமானது உருவாக்கப்படும்.