TNPSC Thervupettagam

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை

March 22 , 2022 854 days 729 0
  • தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர் செல்வம் தனது முதலாவது முழு அளவிலான 2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
  • விவசாய நிலப்பரப்பை 53.50 லட்சம் ஏக்கராக அரசு உயர்த்தியுள்ளது.
  • மேலும், இயற்கை வேளாண்மைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததோடு, தினை உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது.
  • வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்க 200 படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
  • 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் சமுதாயத்தினைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மானியத்தை 20% உயர்த்தி, அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரம் பருப்புச் சாகுபடிக்காக சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய மண் பரிசோதனை மையம் அமைக்கப் படும்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசு 5,157 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
  • மயிலாடுதுறையில் NPKR. ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப் படும்.
  • பாரம்பரிய வகை காய்கறிகளைச் சாகுபடி செய்வதற்கு புத்துயிர் அளிப்பதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பருவம் சாராத தக்காளி சாகுபடிக்கு, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 10 லட்சம் பனை விதைகளை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த ஆண்டில், 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 381 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டிவனம், மணப்பாறை ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • வெல்லம் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர்.
  • தமிழக முதல்வரின் திட்டத்தின் கீழ் 3,000 சூரிய ஒளியில் இயங்கும் பம்புகள் அமைக்கப் படும்.
  • டிஜிட்டல் வேளாண்மைக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கச் செய்வதற்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவானது அமைக்கப்படும்.
  • விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அரசு விருது வழங்கப்படும்.
  • மாநில மற்றும் மாவட்ட அளவில் தினை திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • விதைப்பு முதல் விற்பனை வரையிலான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளுக்காக ஒரு செயலியை அரசு வடிவமைத்துள்ளது.
  • தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்  காய்கறி சந்தை வளாகம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்