TNPSC Thervupettagam

தமிழ்நாடு – தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அதிக வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம்

March 31 , 2021 1241 days 627 0
  • ஒரு அறிக்கையின்படி, வாக்கெடுப்பிற்கு உட்பட்ட மாநிலங்களில், ரூ.65,994 கோடி மதிப்பில் அதிக வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
  • இது 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி கூறப் படுகிறது.
  • பொருளாதார அளவின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பொருளாதாரமானது இந்தியாவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும்.
  • அதனையடுத்து மேற்கு வங்காளம் (6வது), கேரளா (11வது) அசாம் (17வது) மற்றும் புதுச்சேரி (26வது) ஆகியவை உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக இவை இந்தியப் பொருளாதாரத்தின் 20% பங்காகும்.
  • இவ்வறிக்கையின்படி 2020 ஆம் நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அசாம் மாநிலம் 8.6% என்ற அளவில் அதிகபட்ச சராசரி பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
  • மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியானது தேசத்தின் சராசரி வளர்ச்சி வீதத்திற்கு இணையாக உள்ளது.
  • 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக கேரள மாநிலத்தின் வளர்ச்சி 6.3% என்ற வீதத்தில் சராசரி தேசிய வளர்ச்சி வீதத்தை விட குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்